/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு
/
ராஜபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு
ADDED : ஜன 18, 2025 07:21 AM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவுதுடன் சரி செய்யும் பணி என தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றி சப்ளைக்கான கடைசி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதில் அழுத்தம் தாங்காமல் பல்வேறு இடங்களில் பகிர்மான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.
ஒரு சில இடங்களில் உடைப்பு சரி செய்யப்பட்டும் பல இடங்களில் குடிநீர் வாறுகால்களில் கலந்து வீணாவதுடன் அந்தந்த பகுதி ரோடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மாடசாமி கோவில் தெரு, சங்கரன்கோவில் முக்கு, புது பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோடு, முடங்கியாறு ரோடு நீதிமன்ற சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சரி செய்தாலும் மீண்டும் இதே பிரச்சனை எழுந்து வருவதுடன் உடைப்பு சரி செய்யும் பணி போன்றவற்றால் அப்பகுதி குடிநீர் சப்ளைக்கும் தாமதம் ஏற்படுகிறது.
தொடரும் இப் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.