/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டெப்போவில் அடிக்கடி மின் தடை போக்குவரத்து ஊழியர்கள் சிரமம்
/
டெப்போவில் அடிக்கடி மின் தடை போக்குவரத்து ஊழியர்கள் சிரமம்
டெப்போவில் அடிக்கடி மின் தடை போக்குவரத்து ஊழியர்கள் சிரமம்
டெப்போவில் அடிக்கடி மின் தடை போக்குவரத்து ஊழியர்கள் சிரமம்
ADDED : ஆக 02, 2025 12:30 AM
காரியாபட்டி: காரியாபட்டி அரசு போக்குவரத்து டெப்போவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் போக்குவரத்து ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
காரியாபட்டியில் இயங்கி வரும் பஸ் டெப்போ வாடகை இடத்தில் செயல்பட்டு வருகிறது.
போதிய அடிப்படை வசதி கிடையாது. போக்குவரத்து ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பணி முடித்து, இரவு நேரங்களில் ஊழியர்கள் ஓய்வு எடுக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர்ந்து பணி செய்ய முடியாமல், உடல் சோர்வு ஏற்பட்டு பலர் பாதிக்கப்படுகின்றனர்.
அது மட்டுமல்ல சில நேரங்களில் வாகனங்களுக்கு பழுது பார்க்க முடியாமல் போகிறது.
வாகனங்களை சீராக இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சீராக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.