UPDATED : செப் 23, 2026 06:46 PM
ADDED : செப் 23, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு மலையடி வாரத்தில் உடும்பை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ரேஞ்சர் சரண்ராஜ் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் செண்பகத் தோப்பு அத்தி துண்டு மலையடிவாரப் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்குள்ள ஒரு தோப்பில் உடும்பை வேட்டையாடி சமைத்த மம்சாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் 19, மணிகண்டன் 23, அன்பழகன் 32, ஆகியோரை பிடித்தனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்துார் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2ல் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
