UPDATED : செப் 23, 2026 06:52 PM
ADDED : செப் 23, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துார் ஒத்தையாலில் வி.சி.க. கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒத்தையாலில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ரங்கராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயில் புறம் போக்கு நிலத்தை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி அளப்பதற்காக வருவாய்த்துறையினர் நேற்று அங்கு வந்தனர்.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நிலத்தை அளக்கக்கூடாது என வி.சி.க கட்சியினருடன் மக்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்துார் ஆர்.டி.ஓ. கனகராஜ், தாசில்தார் வடிவேல், டி.எஸ்.பி. குருசாமி சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
