/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
/
கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
ADDED : நவ 19, 2025 07:45 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முனியசாமியை 40, நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் நவ.10ல் பணியில் இருந்த இரவு நேர காவலாளிகள் பேச்சிமுத்து 50, சங்கர பாண்டியன் 65, வெட்டி கொலை செய்யப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டு, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தன. கோயிலில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள், கேமரா பதிவு டி.வி.ஆர் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
டி.எஸ்.பி.,க் கள் ராஜா, பஸினா பீவி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த வழக்கில் வடக்கு தேவதானத்தை சேர்ந்த நாகராஜ் 25, நவ. 12 ல் தப்பியோடும் போது போலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த தேவதானத்தை சேர்ந்த முனியசாமி தப்பிச்செல்ல, நேற்று மாலை ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் வந்த போது தனிப்படை போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

