ADDED : நவ 06, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சுந்தரமகாலிங்கம் சன்னதியில் பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சந்தன மகாலிங்கம் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

