/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பால் மாயமான வரத்து ஓடை, சேதமான கரை வேதனையில் முடுக்கன்குளம் பாசன விவசாயிகள்
/
ஆக்கிரமிப்பால் மாயமான வரத்து ஓடை, சேதமான கரை வேதனையில் முடுக்கன்குளம் பாசன விவசாயிகள்
ஆக்கிரமிப்பால் மாயமான வரத்து ஓடை, சேதமான கரை வேதனையில் முடுக்கன்குளம் பாசன விவசாயிகள்
ஆக்கிரமிப்பால் மாயமான வரத்து ஓடை, சேதமான கரை வேதனையில் முடுக்கன்குளம் பாசன விவசாயிகள்
ADDED : நவ 06, 2025 06:59 AM

காரியாபட்டி : ஆக்கிரமிப்பால் காணாமல் போன வரத்து ஓடைகள், சேதமடைந்த கரை, மடை, மேடாகி போன கண்மாய், மழை நீர் தேக்க முடியாமல், விவசாயம் பாதிக்கப்படுவதால் முடுக்கன்குளம் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
காரியாபட்டி முடுக்கன்குளத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் 3 கி. மீ., சுற்றளவில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. 5 மடைகள் உள்ளன. அப்பகுதியில் சிறிது அளவு மழை பெய்தால் கூட கண்மாய்க்கு நீர் வரத்து இருக்கும். எப்படியாவது நெல் விளைச்சல் கண்டுவிடுவர். எப்போதும் பசுமையாக காணப்படும். இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டது. தற்போது, சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. வரத்து ஓடைகள் தூர்வாரப்படவில்லை. நாளடைவில் ஆக்கிரமிப்பால் காணாமல் போயின. ஊரை ஒட்டி உள்ள மடை, கரைகள் சேதம் அடைந்துள்ளன. இந்த ஆண்டு சில தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு காட்டுப்பகுதியில் இருந்து மழை நீர் வரத்து இருந்தது. வரத்து ஓடையில் நீர் வரத்து இல்லாததால், குறைந்த அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. விவசாயத்திற்கு போதுமானதாக இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பராமரிக்க நடவடிக்கை
குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. 5 ஆண்டுகள் நிறைவடைந்த உடன் அடுத்த கட்டமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜேஷ் உதவி பொறியாளர் காரியாபட்டி பொதுப்பணித்துறை
துார் வார வேண்டிய ஓடைகள்
கண்மாய் நிறைந்து, இரு போகம் விவசாயம் செய்வோம். பல்வேறு கண்மாய்கள் நிரம்பி வரத்து ஓடைகள் வழியாக நீர் வந்து சேரும். எப்போதும் விளைச்சல் இருக்கும். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியவில்லை. ஓடைகள் ஆக்கிரமிப்பால் காணாமல் போயின. ஓடைகளை தூர் வார வேண்டும்.
-மங்களநாதன், விவசாயி வாய்க்கால்கள் சேதம்
2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் நடைபெறும். 3, 4 கி. மீ., தூரம் வரை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் செல்லும். வாய்க்கால்கள் சேதம் அடைந்ததால் கடைசி வாய்க்கால்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. விவசாயம் பாதிக்கப்பட்டு, தரிசு நிலங்களாக போட வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. சீரமைத்து, கடைசி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவசாமி, விவசாய சங்கத் தலைவர் சேதமான மடைகள்
சீமை கருவேல மரங்களால், கசிவு ஏற்பட்டு, மழைநீர் வீணாகி வருவதால், தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு சில மடைகள் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது. கரை சேதமடைந்து உள்ளன. கரையை பலப்படுத்தி, சேதம் அடைந்த மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரம், விவசாயி
மேடாகிய கண்மாய்
குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டது. மேடாக இருப்பதால் மழை நீர் அதிக அளவில் தேக்கி வைக்க முடியவில்லை. விவசாயத்திற்கு போதுமானதாக இல்லாததால் ஒரு போகம் விவசாயம் பார்ப்பதே பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி கண்மாயை தூர்வாரி, கூடுதல் மழை நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஐயப்பன், விவசாயி

