தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/செயல்பாட்டிற்கு வந்த குடிநீர் பிளான்ட்

செயல்பாட்டிற்கு வந்த குடிநீர் பிளான்ட்

செயல்பாட்டிற்கு வந்த குடிநீர் பிளான்ட்


UPDATED : நவ 21, 2026 05:48 PM

ADDED : நவ 21, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 05:48 PM ADDED : நவ 21, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் 2 ஆண்டுகளாக செயல்படாத மினரல் குடிநீர் பிளான்ட், 'தினமலர் நாளிதழ்' செய்தி எதிரொலியால் செயல்பாட்டிற்கு வந்தது.

காரியாபட்டி முடுக்கன்குளத்தைச் சுற்றி உப்பு தண்ணீராக இருந்ததால், குடிக்க, சமைக்க பயன்படுத்த முடியாமல் தவித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீரக பாதிப்பால் பலர் ஊரை காலி செய்தனர். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.பல லட்சம் செலவில் மினரல் குடிநீர் பிளான்ட் அமைக்கப்பட்டு, ஒரு குடம் ரூ. 5க்கு வழங்கப்பட்டது.

பழுதாகி 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதால் குடிநீருக்காக மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். எப்போதாவது வரும் மினி டேங்கர் லாரியில் வரும் குடிநீரை ரூ.10க்கு பிடித்தனர்.

பள்ளி மாணவர்களும் குடிநீருக்காக நீண்ட துாரம் நடந்து சென்று எடுத்து வந்தனர். உவர் சுவை நீரால் சிறுநீரக பாதிப்பு அச்சத்தில் இருந்தது குறித்து நவ. 14ல் தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், உடனே நிதி ஒதுக்கீடு செய்து, மோட்டாரை பழுது நீக்கி, நேற்று மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us