/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழியில் சிதிலமடைந்த அம்மா பூங்கா புனரமைப்பு நிதியும் திரும்பி போனது
/
திருச்சுழியில் சிதிலமடைந்த அம்மா பூங்கா புனரமைப்பு நிதியும் திரும்பி போனது
திருச்சுழியில் சிதிலமடைந்த அம்மா பூங்கா புனரமைப்பு நிதியும் திரும்பி போனது
திருச்சுழியில் சிதிலமடைந்த அம்மா பூங்கா புனரமைப்பு நிதியும் திரும்பி போனது
ADDED : டிச 30, 2025 06:19 AM

திருச்சுழி: திருச்சுழியில் அம்மா பூங்கா சிதிலமடைந்து போன நிலையில் அதை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டும் பயன்படுத்தாததால் திரும்பிப் போனது.
திருச்சுழி முத்துராமலிங்கம் நகர் குடியிருப்பு பகுதியில் அம்மா பூங்கா அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு கருவிகள், பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு கருவிகள், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கருவிகள் அமைக்கப்பட்டன.
அந்த பகுதியில் வசித்து வரும் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் பயனடைந்து வந்தனர். நாளடைவில் பூங்கா பராமரிப்பு இன்றி போனது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முற்றிலுமாக பூங்கா புறக்கணிக்கப்பட்டு அனைத்து உடற்பயிற்சி கருவிகளும் சேதம் அடைந்து பூங்காவும் சிதிலமடைந்து கிடக்கிறது.
பூங்கா முழுவதும் சீமை கருவேல மரங்கள், முட்செடிகள் வளர்ந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும் உள்ளன. பூங்காவை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. சுற்றுச்சுவர்களும் பல பகுதிகளில் இடிந்து விழுந்துள்ளன. பாம்புகள், மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவை புனரமைப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நிதி அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.அம்மா பூங்கா என்பதால் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் பூங்காவை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும்.

