/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காதிர் அவுலியா பள்ளிவாசலில் கந்துாரி விழா
/
காதிர் அவுலியா பள்ளிவாசலில் கந்துாரி விழா
ADDED : பிப் 10, 2024 04:22 AM

அருப்புககோட்டை: அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலில் இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான கந்தூரி விழா நடந்தது.
மத நல்லிணக்கத்துடன் நடந்த விழாவில் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை செயலாளர் பவுன்ராஜன், பொருளாளர் செந்தூரான், அமுதலிங்கேஸ்வரர் கோயில் டிரஸ்டி ராஜரத்தினம், மேலாளர் சேர்மராஜன் உறவின்முறை நிர்வாகிகள் தங்கள் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சீர்வரிசைகளுடன் வாழவந்தபுரம் காதிர் அவ்லியா பள்ளிவாசலுக்கு வந்தனர்.
அங்கு சின்ன பள்ளிவாசல் தலைவர் காஜா நஜிமுதீன், செயலாளர் சலீம்பாபு, ஜமாத் நிர்வாகிகள் வரவேற்றனர். பள்ளிவாசலுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்து சமுதாய மக்களை சிறப்பு தொழுகை நடத்திய பின் அனைவருக்கும் கந்தூரி விருந்து அளிக்கப்பட்டது.
இந்து சமுதாய மக்கள் சீர்வரிசை கொண்டு வந்தது இதுவே முதல் முறை. நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை காதல் ஏ.எஸ் .பி., கருண்காரட், நகராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.