ADDED : ஆக 30, 2025 05:43 AM

விருதுநகர்: விருதுநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பா.ஜ., ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
தேசப்பந்து மைதானத்தில் அணிவகுத்து வைக்கப்பட்டிருந்த சிலைகளை பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கினார். ரத வீதிகளை மெயின் பஜார் வழியாக சுற்றி, புல்லலக்கோட்டை ரோடு வழியாக சென்று இறுதியாக கல் கிடங்கில் 38 விநாயகர் சிலைகளை கரைத்தனர்.
* ஹிந்து முன்னனி சார்பில் சாத்துார் முக்குராந்தல் அண்ணா நகர் படந்தால் அமீர் பாளையம் நத்தத்து பட்டிஉள்ளிட்ட 12 இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நேற்று மாலை 4:00 மணிக்கு முக்கு ராந்தல் கொண்டுவரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழாயிரம் பண்ணை கீழச் செல்லையாபுரம் பகுதியில் கல்குவாரி நீரில் கரைக்கப்பட்டன. சாத்துார் டி.எஸ்.பி.நாகராஜன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர்.
*ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹிந்து முன்னணி சார்பில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. நேற்று மாலை 6:50 மணிக்கு ராமகிருஷ்ணாபுரத்திற்கு அனைத்து சிலைகளும் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் குளத்தில் சிலைகள் பூஜைகள் செய்து கரைக்கப்பட்டது. ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் பிரம்ம நாயகம், மாவட்ட தலைவர் யுவராஜ், பா.ஜனதா மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை, மன்னர் சேதுபதி நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். டி.எஸ்.பி.ராஜா தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

