ADDED : ஆக 31, 2025 12:29 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பா.ஜ., ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
ராஜபாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்... எனும் தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
ஹிந்து முன்னணி சார்பில் ராஜபாளையம் பச்சை மடம், பூபால்பட்டி தெரு, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தெரு, சின்ன சுரைக்காய் பட்டி, அம்பேத்கர் நகர், எஸ். ராமலிங்கபுரம், சட்டிக்கிணறு, சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சேத்துார் பகுதிகள் உள்ளிட்ட 29 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
அனைத்து விநாயகர் சிலைகளும் பஞ்சு மார்க்கெட்டில் அணி வகுத்து நின்றன. முன்னாள் நகராட்சி கவுன்சிலர் யோக சேகரன் மாலை 6:30 மணிக்கு விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை ரவுண்டானா, அம்பள புலி பஜார், சங்கரன்கோவில் முக்கு வழியே ஊர்வலமாக எடுத்துச் சென்று கருங்குளம் கண்மாயில் கரைத்தனர். ஏ.டி.எஸ்.பி, கருப்பையா, டி.எஸ்.பி., பஸினா பீவி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.