கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்
கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:34 PM

அ நிறம் | அளவு
திருச்சுழி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செந்தநேந்தலை சேர்ந்தவர் ஆகாஷ், 26 என்பவரை கொலை செய்த வழக்கில் ம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்த நிதிஷ், 24, அவருடைய கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
நிதிஷ் மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கும், அவரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், விருதுநகர் மாவட்ட எஸ்பி., மாவட்ட கலெக்டருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சரண்யா அறி , கொலை வழக்கில் கைதான நிதிஷை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
