/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தலா: போலீசார் சோதனை
/
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தலா: போலீசார் சோதனை
ADDED : நவ 05, 2024 04:45 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திக் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில், கொல்லம், பொதிகை ரயில்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கிருஷ்ணன்கோவிலில் தங்கி அங்குள்ள கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இதில் கடந்த சில மாதங்களாக கஞ்சா கடத்தி வந்ததாக, 6க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இருந்த போதிலும் கிருஷ்ணன் கோவில் பகுதியில் தொடர்ந்து கஞ்சா நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை ஏராளமான மாணவர்கள் கொல்லம், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பினர்.
அவ்வாறு வருபவர்கள் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் பிடிபடவில்லை.