/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ரோட்டோரத்தில் குப்பை எரிப்பு
/
சிவகாசியில் ரோட்டோரத்தில் குப்பை எரிப்பு
ADDED : மார் 02, 2024 05:10 AM

சிவகாசி : சிவகாசி நாரணாபுரம் ரோட்டில் பிச்சாண்டி அருகே ரோட்டோரத்தில் குப்பை எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளதோடு, மூச்சு திணறலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து நாரணாபுரம் செல்லும் ரோட்டில் பிச்சாண்டி தெரு உள்ளது.
போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் ரோட்டோரத்தில் குப்பை கொட்டப்படுகின்றது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் தரம் பிரித்து அவ்வப்போது அகற்றுவர்.
ஆனால் சமீபத்தில் இங்கு ரோட்டில் பெரும்பான்மை பகுதியை மறைத்து குப்பை கொட்டப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் குப்பைகளை அகற்றாமல் அங்கேயே எரிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
அதிக அளவில் புகை எழும்பியதால் குடியிருப்புவாசிகளும் அவதிப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டதால் மக்கள் அதில் உள்ளனர்.
எனவே இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

