/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் அருகில் குப்பைகள் எரிப்பு *மக்கள் பாதிப்பு

ADDED : மார் 20, 2025 06:47 AM

திருச்சுழி: திருச்சியில் திருமேனிநாதர் கோயில் அருகில் குப்பை கொட்டி எரிப்பதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் பாதிப்பில் உள்ளனர்.
திருச்சுழியில் திருமேனி நாதர் கோயில் காம்பவுண்ட் சுவர் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையை கொட்டி அடிக்கடி தீ வைத்து விடுகின்றனர். இதனால் ரோட்டில் செல்வோருக்கு புகையால் கண் எரிச்சல் ஏற்படுவது உடன் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகை செல்வதால் அங்குள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று குப்பைகளை கொட்டி தீ வைத்துள்ளனர். தீ எரிந்து பரவியதால் அந்தப் பகுதியும் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறை அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்தப் பகுதியில் குப்பை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.
படம் உள்ளது