நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி ஆனையூர் ஊராட்சி மாரியம்மன் நகரில் குப்பை அகற்றப்பட்டது.
சிவகாசி ஆனையூர் ஊராட்சி மாரியம்மன் நகரில் குடிநீர் பற்றாக்குறை , ரோடு சேதம் என பல்வேறு பிரச்னைகளால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டனர். தவிர குப்பை சேகரிக்க ஆட்கள் வராததால் குப்பை அகற்றப்படாமல் தெருவில் சிதறி கிடந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்பட்டது.
எனவே குப்பையை அகற்ற வேண்டும் என தினமலர் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து ஆனையூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக குப்பை அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

