/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர்வரத்து ஓடையில் குப்பை, துருப்பிடித்த ஷட்டர்கள்--
/
நீர்வரத்து ஓடையில் குப்பை, துருப்பிடித்த ஷட்டர்கள்--
நீர்வரத்து ஓடையில் குப்பை, துருப்பிடித்த ஷட்டர்கள்--
நீர்வரத்து ஓடையில் குப்பை, துருப்பிடித்த ஷட்டர்கள்--
ADDED : டிச 12, 2024 04:46 AM
ராஜபாளையம்: கண்மாயில் ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள், நீர் வரத்து ஓடையில் குப்பை போன்ற சிக்கல்களால் விவசாயிகள் சங்கடத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் தென்காசி மெயின் ரோட்டில் அலப்பச் சேரி கண்மாய் உள்ளது. 280 ஏக்கர் பாசன பரப்புடன் அய்யனார் கோவில் ஆற்று நீர் நேரடியாக ஒரு பங்கும், கிருஷ்ணாப்பேரி கண்மாய் உபரி நீர் கண்மாய்க்கான நீர்வரத்து ஆதாரமாக உள்ளது.
நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மேற்கு, கிழக்கு, நடு என மொத்தம் மூன்று பாசன மதகுகள் உள்ள நிலையில் கிழக்கில் உள்ள மதகு திறக்க முடிவதில்லை.
கண்மாய்க்குள் சீமை கருவேல மரங்கள் புதர்களாக வளர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிக்கின்றன. இதனால் தண்ணீர் இருப்பு வேகமாக ஆவியாகி கோடை காலங்களில் பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
விவசாய தேவைக்கு என ஒதுக்கப்பட்ட கண்மாய் மண்ணை இந்த ஆண்டு பல்வேறு வணிக தேவைகளுக்காக அரசு, தனியார் அள்ளிச் சென்றதால் கண்மாய் உள்பகுதி சிறிய தெப்பமாக குழிகளுடன் காணப்படுகிறது.
நகராட்சி அடுத்த பகுதியில் உள்ளதால் குடியிருப்பின் கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டும் இடமாக தென்காசி மெயின் ரோட்டில் உள்ள நீர் வரத்து ஓடையை மாற்றியுள்ளனர்.
உபரி நீர் வெளியேறி வெங்காநல்லுார் செல்லும் 25 அடி அகல ஓடையும் ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது. இதில் விவசாய விளைப் பொருட்களை கொண்டு சென்று வந்த நிலையில் தற்போது மாட்டு வண்டி மட்டும் செல்லும்படியாக மாறிவிட்டது.
கண்மாய் அருகே கட்டடங்கள் பெருகுவதால் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் ஓடையில் நேரடியாக கலப்பு என பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.