/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தார்ப்பாய் போடாத குப்பை மினி லாரிகள் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவதி
/
தார்ப்பாய் போடாத குப்பை மினி லாரிகள் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவதி
தார்ப்பாய் போடாத குப்பை மினி லாரிகள் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவதி
தார்ப்பாய் போடாத குப்பை மினி லாரிகள் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 17, 2025 06:23 AM

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி பகுதிகளில் குப்பை அள்ளி செல்லும் லாரி உள்ளிட்ட வண்டிகளில் தார்ப்பாய் போடாமல் செல்வதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
விருதுநகர் நகராட்சியின் 36 வார்டுகள் உள்ளன. 2022 முதல் இங்கு குப்பை அள்ளும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நாள் முதலே மாதந்தோறும் கோடிக்கணக்கில் பணம் வழங்கி வருகிறது. இருப்பினும் குப்பை பாயின்டுகள் குறைந்தபாடில்லை. கவுசிகா நதியில் குப்பை கொட்டுவதை கலெக்டர் ஜெயசீலனும் எச்சரித்துள்ளார். இருப்பினும் தற்போது வரை குப்பை கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. அருகில் உள்ள கூரைக்குண்டு ஊராட்சி மக்களும் கொட்டுகின்றனர். இத்தகைய சூழலில் தற்போது கூடுதல் தொந்தரவாக தார்ப்பாய் போடாமல் குப்பையை கொண்டு செல்வது அதிகரித்துள்ளது.
இதனால் அந்த வாகனங்கள் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதே நிலை பிற நகராட்சிகளில் உள்ளது. ஆனால் மற்ற நகராட்சிகளை விட இது மிகவும் விருதுநகர் போக்குவரத்து நெரிசல் அதகிம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பேட்டரி வண்டிகள் எதுவும் செயல்படாததால் தள்ளுவண்டிகளில் குப்பை சேகரிக்கும் துாய்மை பணியாளர்களுக்கு தற்போது வரை நகராட்சி நிர்வாகம் தீர்வு காணாமல் உள்ளது. அதே போல் அவ்வாறு சிறு சிறு தள்ளுவண்டிகள் மூலம் பெறும் குப்பை மினிலாரிகளில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கு தேவையான தார்ப்பாய் வழங்காததால் பாதி பறந்தும், வாகன ஓட்டிகள் மீது பட்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.