/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய கலெக்டர் அலுவலக ஜன்னல் ஓரங்களில் குவியுது குப்பை, நல்லிகளில் வராத தண்ணீர் புதிய கலெக்டர் அலுவலக ஜன்னல் ஓரங்களில் குவியுது குப்பை

ADDED : ஜூலை 02, 2025 07:36 AM

விருதுநகர் : விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக வளாக ஜன்னல் ஓரங்களில் குப்பை குவிவதாலும், நல்லகளில் தண்ணீர் வராததாலும் புழக்க நீரின்றி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
விருதுநகரில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது பல்வேறு அலுவலக ஜன்னல் வெளிப்புறங்களில் காகித குப்பை கொட்டப்பட்டிருந்தது. ஏற்கனவே தளங்கள் தோறும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அப்படியிருந்தும் குப்பை கொட்டப்படுவது ஏன் என்ற புகார் எழுந்துள்ளது.
காகித குப்பை என்பதால் இவை அலுவலகங்களில் இருந்து வெளியேற்றப்படுவதாக இருக்கலாம். அதே போல் தளங்களின் ஒரு சில அலுவலக அறைகளின் நல்லிகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் சாப்பிட்ட பிறகு பாத்திரம் கழுவ முடியாமலும், புழக்க தேவைக்காகவும் தண்ணீர் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
புதிய கலெக்டர் அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்து 6 மாதங்களுக்கு மேலாகிறது. இருப்பினும் குடிநீர் பிரச்னை, புழக்க நீர் பிரச்னை தீராத தலைவலியாக இருந்து வருகிறது. மேலும் குப்பை கொட்டுவது தற்போது இன்னொரு சிக்கலாக உள்ளது. அறைகளில் புழக்கத்தற்கு தண்ணீர் இல்லாததால் உணவு உண்ட பின் சுகாதார வளாகங்கள் சென்று கை கழுவி வரும் நிலை உள்ளது. எனவே கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குப்பை, புழக்கத்திற்கு தேவையான நீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.