/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டருகில் குப்பைக்கு தீ வைப்பு வாகனங்களில் செல்வோர் பாதிப்பு
/
ரோட்டருகில் குப்பைக்கு தீ வைப்பு வாகனங்களில் செல்வோர் பாதிப்பு
ரோட்டருகில் குப்பைக்கு தீ வைப்பு வாகனங்களில் செல்வோர் பாதிப்பு
ரோட்டருகில் குப்பைக்கு தீ வைப்பு வாகனங்களில் செல்வோர் பாதிப்பு
ADDED : அக் 05, 2025 03:33 AM
அருப்புக்கோட்டை : அருப்புகோட்டை அருகே ஆத்திப்பட்டி பகுதியில் மெயின் ரோடு அருகில் குப்பையை கொட்டி தீ வைப்பதால் வாகனங்களில் செல்வோருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஆத்திப்பட்டி ஊராட்சி . இதற்கு உட்பட்டது ஜெயராம் நகர். இங்கு ஊராட்சியில் இருந்து குப்பைைய முறையாக வாங்க வருவது இல்லை. மக்கள் குப்பையை ரோடு அருகில் கொட்டியும், தெரு ஓரங்களில் குவித்தும் வைக்கின்றனர். ரோடு அருகில் தேங்கிய குப்பையில் தீ வைப்பதால் அது மளமளவென எரிந்து கிளம்பும் அடர்த்தியான புகையால் அந்தப் பகுதி ரோட்டில் வாகனங்களில் செல்வோருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. ஊராட்சியில் இருந்து குப்பையை தினமும் வாங்க நடவடிக்கை எடுக்கவும், ரோடுகளின் அருகே குப்பைையகொட்டி எரிக்க கூடாது என, மக்களிடம் அறிவுறுத்தவும் வேண்டும்.