/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டி முடித்த 4 ஆண்டுகளில் சிமென்ட் பூச்சு விழுகிறது ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டடத்தின் நிலை
/
கட்டி முடித்த 4 ஆண்டுகளில் சிமென்ட் பூச்சு விழுகிறது ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டடத்தின் நிலை
கட்டி முடித்த 4 ஆண்டுகளில் சிமென்ட் பூச்சு விழுகிறது ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டடத்தின் நிலை
கட்டி முடித்த 4 ஆண்டுகளில் சிமென்ட் பூச்சு விழுகிறது ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டடத்தின் நிலை
ADDED : அக் 05, 2025 03:29 AM

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஜெனரேட்டர் ஆகியவை செயல்படாமல் உள்ளது. கட்டடத்தின் பின்புற சிமென்ட்பூச்சுக்கள் விழுகின்றன.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளது. 2021ல் இந்த கட்டடம் கட்டப்பட்டது.பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்தமின் துாக்கி, ஜெனரேட்டர் தற்போதுசெயல்பாட்டிற்கு வந்தது.
இக்கட்டடத்தின் பின்பக்கம் வர்ண பூச்சுக்கள் பெயர்ந்து சிமென்ட் பூச்சுக்கள் தெரிகிறது. மழை நேரங்களில் அந்த பூச்சுக்களும் விழுந்து விடுகிறது.இதில் மேலும் மேலும் தண்ணீர் பட்டால் கட்டடம் பலவீனமடைய வாய்ப்புள்ளது. இந்த கட்டடம் கட்டி 4ஆண்டுகள் தான் இருக்கும் சூழலில் அதற்குள்ளே அலுவலகம் இவ்வாறு மாறி இருப்பது அங்குள்ள அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஊரக வளர்ச்சி முகமை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளின் திட்டங்களை செயல்படுத்துகிறது. இதற்கென ஒருங்கிணைந்த கட்டடம் கட்ட வேண்டும் என்பதற்காக தான் பழைய கலெக்டர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ளது.
தினசரி மாலை நேரங்களில் பில் வாங்க கரைவேட்டி அரசியல் வாதிகளின் வருகையும் அதிகமுள்ளது. இத்தகைய செல்வாக்கு அதிகமுள்ள அலுவலகத்தின் கட்டடங்கள் கட்டிய நான்கு ஆண்டுகளிலே பூச்சு பெயர்ந்திருப்பது இவர்களின் பணியை கேள்விக்குள்ளாக்குகிறது.
பூச்சு பெயர்ந்து விழுந்த எதிர்ப்புறத்தில் தான் மாவட்ட மைய தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம் உள்ளது. இதில் முதலில் ஆய்வு செய்ய வேண்டியது இந்த கட்டடத்தின் உறுதி தன்மையை தான்.
நான்கு ஆண்டுகளிலே பூச்சுக்கள் பெயர்ந்துள்ளது எந்தளவுக்கு நியாயம் என மக்கள் குமுறுகின்றனர். 2023ல் பாதி பெயர்ந்திருந்த சுவர்களில் தற்போது முக்கால்வாசி பெயர்ந்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் இக்கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். சிமென்ட் பூச்சுக்கள் பெயரும் அளவு கட்டியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்ததாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்.