/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்தவெளியில் கேட் வால்வுகள்; பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு சிக்கல்
/
திறந்தவெளியில் கேட் வால்வுகள்; பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு சிக்கல்
திறந்தவெளியில் கேட் வால்வுகள்; பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு சிக்கல்
திறந்தவெளியில் கேட் வால்வுகள்; பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு சிக்கல்
ADDED : ஜன 02, 2025 11:59 PM
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை கிராம பகுதிகளில் குடிநீர் குழாய்களின் கேட் வால்வுகள் திறந்த வெளியில் இருப்பதாலும், நீர் கசிவதாலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கபடுவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தாமிரபரணி திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முக்கிய பகுதிகளில் மேல்நிலைத் தொட்டி கட்டி பகிர்மான குழாய்கள் மூலம் தண்ணீர்தொட்டியில் ஏற்றப்படுகிறது. இவற்றின் மூலம் தண்ணீரை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு திருப்பி விடுவதற்கு ஆங்காங்கு கேட்வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை எந்தவித பாதுகாப்பும் இன்றி திறந்தவெளியில் உள்ளன. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் மழையாலும், வெயிலாலும் குழாய்கள் துருப்பிடித்து கேட் வால்வுகள் அமைக்கபட்ட பகுதியில் நீர் கசிகிறது. கசிந்து வரும் பகுதியில் காற்றில் பறக்கும் துாசுகள் பறந்து பகிர்மான குழாய்க்குள் சென்று தண்ணீரோடு கலந்து விடுகிறது.
மேலும் கால்நடைகள்கேட் வால்வு அருகிலேயே சிறுநீர் கழிப்பதால் அதுவும் தண்ணீரோடு கலந்து விடும் அபாயம்உள்ளது. இதனால் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
இதேபோன்று சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம், செம்பட்டி, பாலையம்பட்டி உள்ளிட்ட பல ஊராட்சிகளில் திறந்தவெளியில் தான் கேட் வால்வுகள் உள்ளன. இவற்றை பாதுகாப்பாக மூடி வைத்தும், தண்ணீர் கசியாமல் சரி செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்.

