நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில்பி.சி., எம்.பி.சி., நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். இணைச்செயலாளர் ஜனகராஜ் வரவேற்றார்.
மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரும் காலங்களில் காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் மாநில மையம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு அளிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர் சங்கர், ஆலோசகர் வேல்மணி, மாநில இளைஞரணி குமார், மகளிரணி வேலுமணி முன்னிலை வகித்தனர். இணைச்செயலாளர் செல்லமுத்து நன்றிக் கூறினார்.

