நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அல்லம்பட்டியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கணேச பாண்டியன் தலைமையில் நடந்தது.
மகளிர் அணி உறுப்பினர் சாந்தா வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ராமசுப்பு, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜபாண்டியன், முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெம்பக்கோட்டை உள்ளிட்ட ஒருசில ஒன்றிய தனி அலுவலர்களின் பணியாளர் விரோத போக்கினை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
நிர்வாகிகள் கண்ணன், மேனகா, வேல்முருகன், மாரீஸ்வரன், ராமகிருஷ்ணன் உட்பட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.