நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் ஜவுளி, ரெடிமேட் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் செந்தில் பிரபு தலைமையில் நடந்தது.
செயலாளர் ஸ்ரீராம் முருகேசன், பொருளாளர் ரமேஷ்குமார், துணைத்தலைவர் ராமபிரான், இணைச் செயலாளர்கள் ஹாரூன் ரசீத், பிரகாஷ் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்தற்காலிக ஜவுளி கடைகள் வெளியூர் நபர்கள் அவ்வப்போது மண்டபங்கள் மற்றும் இதர இடங்களில் அமைத்து வியாபரம் செய்கின்றனர். இதனால் உள்ளூர் கடைக்காரர்களின் தொழில் மிகவும் பாதிப்பு அடைகிறது.
இதனை தடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
புதிய நிர்வாகிகளாக தலைவர் செந்தில்பிரபு,செயலாளர் ஸ்ரீராம்முருகேசன்,பொருளாளர் ஹாரூன்ரசீத், துணைத்தலைவர்கள் ராமபிரான், ஜெய்லானி, இணைச்செயலாளர்கள் ராம்குமார், பிரகாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

