/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்லீப்பர் பெட்டிக்கு பதில் பொதுப் பெட்டி இணைப்பு
/
ஸ்லீப்பர் பெட்டிக்கு பதில் பொதுப் பெட்டி இணைப்பு
ADDED : மே 04, 2025 01:56 AM
விருதுநகர்:முன்பதிவு செய்யாத பயணிகள் பயன்பெறும் வகையில் ஜூலை முதல் முக்கிய ரயில்களில் ஒரு ‛ஸ்லீப்பர்' பெட்டி குறைக்கப்பட்டு ஒரு பொதுப் பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூலை 2 முதல் கொல்லம் -- எழும்பூர் (20636), ஜூலை 3 முதல் எழும்பூர் -- கொல்லம் (20635) ‛அனந்தபுரி' ரயில்கள், ஒரு ஏ.சி., முதல் வகுப்பு பெட்டி, 2 ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 11 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.
ஜூலை 5 முதல் காச்சிகுடா - -நாகர்கோவில் (16353), ஜூலை 6 முதல் நாகர்கோவில் - காச்சிகுடா (16354) வாராந்திர ரயில்கள், ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 5 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 10 ஸ்லீப்பர் பெட்டிகள், 1 பேன்ட்ரி கார், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.
ஜூலை 1 முதல் கொல்லம் -- எழும்பூர் (16102), ஜூலை 2 முதல் எழும்பூர் - -கொல்லம் (16101) ரயில்கள், ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 9 ஸ்லீப்பர் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.

