/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடியில் மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி
/
இருக்கன்குடியில் மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி
ADDED : அக் 01, 2024 05:33 AM

சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே இருக்கன்குடியில் தெருவில் விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து சம்யுக்தா 5, பலியானார்.
இருக்கன்குடியை சேர்ந்தவர் மணி கார்த்திக், -நந்தினி தம்பதியின் மகள் சம்யுக்தா 5. நேற்று காலை 9:00 மணிக்கு வீட்டின் முன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். லேசான மழை பெய்ததால் வீட்டருகே இருந்த மின்கம்பத்தை விளையாடும் போது தொட்டத்தில் சம்யுக்தா உடலில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், சம்பவம் நடந்த மின் கம்பத்தில் இருந்து பல நாள்களாக தீப்பொறி தெறித்து விழுந்துள்ளது. மின்வாரியத்தில் புகார் செய்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றனர்.