/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காப்பகத்தில் இருந்து தப்பித்த சிறுமிகள் மீட்பு
/
காப்பகத்தில் இருந்து தப்பித்த சிறுமிகள் மீட்பு
ADDED : மார் 30, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் உள்ள காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 சிறுமிகளை போலீசார் மதுரையில் மீட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் இருந்து மீட்கப்படும் சிறுமிகள் பாண்டியன் நகரில் உள்ள அரசு உதவி பெறும் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.
இங்கிருந்து விருதுநகரைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி, சிவகாசியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஆகிய இருவரும் தப்பிச்சென்றனர். இவர்கள் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் இருப்பதை போலீசார் கண்டறிந்து விருதுநகருக்கு அழைத்து வந்தனர்.