/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருப்ப ஓய்வில் செல்வது தான் மாணவர்களுக்கு நன்மை பள்ளி ஆய்வின் போது டோஸ் விட்ட கலெக்டர்

ADDED : செப் 21, 2024 05:03 AM
காரியாபட்டி : காரியாபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் ஜெயசீலன் மெல்ல கற்கும் மாணவர்களின் கற்பித்தல் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாத இரு ஆசிரியர்களை விருப்ப ஓய்வில் செல்வது தான் அவர்களுக்கு செய்யும் நன்மை என டோஸ் விட்டார்.
உங்கள் ஊரில் உங்களை தேடி என்ற திட்டத்தின் கீழ் காரியாபட்டியில் ஆய்வு செய்த கலெக்டர் ஜெயசீலன் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டார். 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் மெல்ல கற்கும் மாணவர்கள் பட்டியலையும், அந்த மாணவர்களுக்கு தினசரி எழுத்து பயிற்சி தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளையும் பணி முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தார். இப்பள்ளி தமிழ், இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களின் ஆசிரியர்கள்மெல்ல கற்கும் மாணவர்கள் பட்டியலை தயாரித்து, தொடர் பயிற்சி வழங்குவதை பாராட்டினார். காலாண்டு தேர்வு நடக்க உள்ள சூழலில் கடந்த 3 மாதங்களாக மெல்ல கற்கும் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து எந்த முயற்சியும் ஏன் எடுக்கவில்லை முதுகலை ஆங்கில, வேதியியல் ஆசிரியர்கள் இருவரிடமும் கலெக்டர் கடிந்து கொண்டார். இது போன்று தொடர்ச்சியாக மோசமாக செயல்பட்டு பள்ளியில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு காரணமாக இருந்தால் நீங்கள் விருப்ப ஓய்வில் செல்வதுதான் மாணவர்களுக்கான நன்மையாக இருக்கும், என்று இருவரையும் எச்சரித்தார். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முதன்மை கல்வி அலுவலர் அமுதாவுக்கு உத்தரவிட்டார்.