/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தங்கப்பத்திர விற்பனை நாளை முதல் துவக்கம்
/
தங்கப்பத்திர விற்பனை நாளை முதல் துவக்கம்
ADDED : பிப் 11, 2024 01:31 AM
விருதுநகர்: விருதுநகர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை நாளை பிப். 12 முதல் துவக்கப்பட உள்ளது.
துணை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தங்கப் பத்திர சேமிப்பு திட்டத்தின் படி தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கலாம்.
தங்கப்பத்திர விற்பனை பிப். 12 - 16 வரை 5 நாட்கள் நடக்கிறது. ஒரு கிராம் ரூ.6253 என மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
பத்திரம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆதார், பான், வங்கி பாஸ்புக் முதல் பக்கம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். முதலீடு செய்வோருக்கு ஆண்டு வட்டி விகிதம் 2.5 சதவீதமாக ஆண்டுக்கு இரு முறை பிரித்து வழங்கப்படுகிறது.
இந்த வட்டி முதலீட்டாளர்களின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு அதற்கேற்ப வரி விதிக்கப்படும். முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். எனினும் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேற விருப்பம் இருந்தால் வெளியேறலாம்.மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது 95007 78877 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.