/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
ADDED : செப் 29, 2024 01:24 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில், இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், சுடுமண் பொம்மையின் தலைப்பகுதி, சூது பவள மணி என, 2,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர்பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், ''முன்னோர்கள் வாணிபத்தில் ஈடுபட்டதற்கான, பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகிறது. சமீபத்தில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
''இந்த நாணயத்தில் ஒரு பகுதியில் இதழ்கள் வடிவமும், மறுபகுதியில் புள்ளி, கோடுகள் செதுக்கப்பட்டுள்ளது. எந்தப் பொருளாக இருந்தாலும், முன்னோர்கள் அலங்காரம் செய்தே பயன்படுத்தியுள்ளனர். அதேபோல், இந்த தங்க நாணயமும் அலங்காரத்துடன் காணப்படுகிறது,'' என்றார்.