நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துாரில் வழக்கறிஞர் எழுத்தர்கள் நல சங்கத்தின் பொன்விழா ஆண்டு நடந்தது.
சங்கத் தலைவர் தமிழ் ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் முத்து மணி வரவேற்றார். விழாவில் நீதிபதிகள் மணி, சுந்தரகாமேஷ் மார்த்தாண்டம், ராமநாதன், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பேசினர்.
வழக்கறிஞர் எழுத்தர்கள் சேமநல நிதியை உயர்த்தி வழங்கவும், 50 வயது கடந்தவர்களுக்கும் சேம நல்ல நிதியில் பாதி தொகையை வழங்கிடவும், மத்திய அரசும் சேமநல நிதி வழங்கவும் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர் எழுத்தர்கள் பங்கேற்றனர்.