ADDED : மார் 17, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் கோதண்டராமர் கோயில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
இக் கோயில் விழா மார்ச் 10ல் கொடியேற்றத்துடன் தொடங்கி  தினமும் சிம்ம, அனுமந்த, சேஷ, கருட வாகன அலங்காரங்களில் சுவாமி  வீதி உலா நடக்கிறது.
சிறப்பு நிகழ்வாக திருக்கல்யாணம் நேற்று காலை 10:00 மணிக்கு கோயில் அர்ச்சகர் குழுவினர் தலைமையில் கோதண்டராமர், சீதா தேவிக்கு திருமணம் நடந்தது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் சீனிவாசராஜா தலைமையில் விழா குழுவினர் செய்தனர்.

