/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விபத்து இழப்பீடு வழங்காததால் ஸ்ரீவி.,யில் அரசு பஸ் ஜப்தி
/
விபத்து இழப்பீடு வழங்காததால் ஸ்ரீவி.,யில் அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் ஸ்ரீவி.,யில் அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் ஸ்ரீவி.,யில் அரசு பஸ் ஜப்தி
ADDED : பிப் 02, 2024 05:56 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : விபத்து வழக்கில் பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு டிப்போ பஸ், நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் பஸ் ஸ்டாண்டில் வைத்து ஜப்தி செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடேஸ்வரபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜமுருகன், 25, பால், ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
2017 ஜன.16ல் டூவீலரில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி தாதன்குளம் விலக்கு ரோடு அருகில் செல்லும்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பஸ் மோதி ராஜமுருகன் பலியானார்.
அவரது மனைவி ரெங்க திலகம் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு ரூ. 13 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் உறுதி செய்தது. ஆனால், ரெங்க திலகத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை.
இதனையடுத்து ரெங்க திலகம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் கோவை மண்டல பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து நேற்று காலை 8: 15 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் வைத்து ராஜபாளையத்தில் இருந்து ஈரோட்டிற்கு புதிதாக இயக்கப்பட்ட அரசு பஸ்ஸை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

