ADDED : பிப் 16, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ராஜபாளையம் அருகே சேத்துாரைச் சேர்ந்தவர் குருலட்சுமி 32. இவருக்கு முகத்தின் கீழ்தாடை மூட்டு இறுக்க நோய் இருந்தது.
ஒரு மில்லி மீட்டர் அளவு கூட வாயை திறக்க முடியாமல் நீராகார உணவுகளை எடுத்து கொள்ள முன்பக்க இரண்டு பற்கள் எடுக்கப்பட்டது. இவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என விருதுநகர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கண்டறிந்தனர்.
இங்கு டீன் ஜெயசிங் தலைமையில் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ்குமார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன், காது, மூக்கு தொண்டை நிபுணர் கருப்பசாமி நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது நலமுடன் உள்ளார். அவரால் வாய் திறந்து, நன்றாக பேசவும், உணவு உண்ணவும் முடிகிறது.

