ADDED : பிப் 16, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சரண்டர் விடுப்பை உடனடியாக வழங்குவது, சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
600 சத்துணவு ஊழியர்கள், 165 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்,வருவாய் கிராம உதவியாளர்கள், சாலை பராமரிப்பு ஊழியர்கள், கூட்டுறவு, வேளாண்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள்என 1800க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.