/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி
ADDED : ஜன 18, 2024 05:23 AM
சிவகாசி: சிவகாசி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி, எம்.புதுப்பட்டி, எரிச்சநத்தம், வடமலாபுரம், விஸ்வநத்தம், மாரனேரி, கிருஷ்ண பேரி, நாரணாபுரம், சித்துராஜபுரம், ஆலமரத்துப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
நாரணாபுரம், சித்துராஜபுரம், சிவகாசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஆலமரத்துப்பட்டி, எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு டாக்டர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.
பெரும்பான்மையான டாக்டர்கள் பணி மாறுதல் பெற்றும், மேற்படிப்புக்காகவும் சென்று விட்டனர். மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், செவிலியர்கள், பற்றாக்குறையாகவே உள்ளது. இதனால் தலைவலி, காய்ச்சல் என்று வருபவர்கள் கூட சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகின்றது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கவும் வழி இல்லை. இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சிவகாசி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.