/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை
/
அரசு பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை
ADDED : நவ 15, 2025 04:48 AM

திருச்சுழி: திருச்சுழி எம் . ரெட்டியபட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்து யோகாவில் உலக சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா செய்தனர்.
40 நிமிடங்களில் மாணவர்கள் வரிசையாக நின்று தொடர்ந்து 20 நிமிடம் சூரிய நமஸ்காரம் செய்தனர். பின் 1 நிமிட இடைவெளி விட்டு 20 நிமிடம் சூரிய நமஸ்காரம் செய்தனர்.
மாணவ, மாணவியர்களின் இந்த சாதனை முயற்சியை உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு குளோபல் புக் ஆப் யோகா வேர்ல்ட் ரிகார்ட் நிறுவனம் சான்றிதழ்கள் கோப்பைகள் வழங்கியது.
மாணவர்கள் யோகா ஆசிரியர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

