/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் நெருங்குவதால் ஸ்மார்ட் மீட்டர் விவகாரத்தில் அரசு மவுனம்
/
தேர்தல் நெருங்குவதால் ஸ்மார்ட் மீட்டர் விவகாரத்தில் அரசு மவுனம்
தேர்தல் நெருங்குவதால் ஸ்மார்ட் மீட்டர் விவகாரத்தில் அரசு மவுனம்
தேர்தல் நெருங்குவதால் ஸ்மார்ட் மீட்டர் விவகாரத்தில் அரசு மவுனம்
ADDED : டிச 12, 2025 05:45 AM
விருதுநகர்: ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஏற்கனவே டெண்டர் விட்டு விட்ட நிலையில் 2026 ஜூலை முதல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி அமலுக்கு வரும். இப்பணியை இப்போதே துவங்கினால் மக்கள் அதிருப்தியால் 2026ல் தேர்தலில் ஓட்டுக்கள் பறிபோகும் அபாயம் உள்ளதால் தி.மு.க., அரசு மவுனம் காத்து வருகிறது.
தமிழகத்தில் மின் வாரியம் சார்பில் 2024 முதல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அவை செயல்படும் விதம் உள்ளிட்டவை குறித்து மின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
2026ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்ற நிலை தான் மின்வாரியத்தில் உள்ளது. காரணம் இதை பொருத்தும் பணி தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்போதே பொருத்தும் பணியை துவக்கினால், மின் கட்டண விலையேற்றமும் இருக்கும். பீக் அவர் கட்டணங்கள் அனைத்து வணிக கடைகளுக்கும் வந்து விடும்.
இது குறித்து மக்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற் படுத்தினால் தான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி சுமூகமாக நடக்கும் என்ற நிலை உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் மின் கணக்கீடை துல்லியமாக செய்ய முடியும். டிஜிட்டல், பழைய தகர மீட்டர்களில் மின் கசிவுகள் கணக்கிடப்பட மாட்டாது. சிறிய அளவிலான மின் வருவாய் இழப்பு இருந்துக் கொண்டே இருக்கும். இதை தவிர்க்க தான் ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் திடீரென கொண்டு வரும் போது ஏற்படும் விலையேற்றம், அடுத்தடுத்த மின் கட்டண பில்களில் மக்களை கொந்தளிக்க செய்ய வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் மின் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தாமல் அரசு மவுனம் காக்கிறது. நிரந்தர தீர்வாக ஸ்மார்ட் மீட்டர் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின் அதன் பணிகளை துவக்க வேண்டும்.

