/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலைக்கு ரூ.27 லட்சம் ஆராய்ச்சி நிதி
/
கலசலிங்கம் பல்கலைக்கு ரூ.27 லட்சம் ஆராய்ச்சி நிதி
கலசலிங்கம் பல்கலைக்கு ரூ.27 லட்சம் ஆராய்ச்சி நிதி
கலசலிங்கம் பல்கலைக்கு ரூ.27 லட்சம் ஆராய்ச்சி நிதி
ADDED : டிச 12, 2025 05:45 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்திற்கு ஆராய்ச்சி கூட்டாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் மானியத்திற்கான ஆணையை தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நடந்த விழாவில் வழங்கினார்.
பல்கலைக்கழக டி.பி.ஐ. தலைவர் டேனி திட்ட தலைமை ஆராய்ச்சி யாளராகவும், உதவியாக கோவை அப்ரோக்ஸ்டெக் கம்பெனி ஆராய்ச்சி யாளர்கள் ஸ்ரீ வீர முத்துராஜ், ராஜ பிரியன், திக்விஜயன், தீபிகா ஆகியோர் கூட்டாக இணைந்து சமூக ஆரோக்கியத்தை மேம் படுத்துவதை நோக்க மாகக் கொண்டு, இதயம் சம்பந்தமான கருவிகள் உற்பத்தியில் தொழிற் சாலைகளுடன் இணைந்து ஆராய்ச்சி திட்டம் மேற்கொள்வதற்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு நிதி பெற்றமைக்கு அதற்காக பாடுபட்ட பேராசிரியர்களை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் அறி வழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.

