ADDED : பிப் 21, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி தண்டியனேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் மாரியம்மாள் தலைமை வகித்தார்.
ஏ.இ. ஓ.. ஆனந்தவேல் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. கூடுதல் ஏ.இ.ஓ., சிவக்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஷ் பாபு, பரிசு வழங்கினர்.
முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் அழகர், ஊராட்சி துணைத் தலைவர் செல்வம், பேராசிரியர் பெருமாள், ஆசிரியர் பயிற்றுநர் அசோக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை சாரதா நன்றி கூறினார்.

