நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 598 இளங்கலை, 251 முதுநிலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சியை கல்லுாரிச் செயலாளர் மகேஷ் பாபு துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சாரதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா துணை இயக்குனர் கிரகதுரை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் கல்லுாரித் தலைவர் சம்பத்குமார், உபதலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், கல்லுாரித் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் செல்வசங்கரன் செய்தார்.

