நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: திருச்சுழி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா 152 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
இவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வேதியியல் துறையில் பல்கலை அளவில் அர்ச்சனா தேவி 6வது இடம் பெற்று சாதனை படைத்தார்.
அவருக்கு வெள்ளி நாணயம், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. முதல்வர் பியூலா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

