நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் சத்திரப் பட்டி ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது.மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
மகளிர் சுய உதவி குழு பெண்கள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

