ADDED : டிச 12, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் உப்பத்துார் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஆடு, மாடு வளர்ப்பு தொழில் புரிவதற்கு கடன் உதவி பெற்ற 24 பயனாளி களுக்கு தலா ரூ 50,000 வீதம் மொத்தம் ரூ 12 லட்சம் மானியத்திற்கான ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
கலெக்டர் சுகபுத்ரா ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தாட்கோ மாவட்ட மேலாளர் மஞ்சுளா,ஆர்.டி.ஓ. கனகராஜ், மாவட்ட வங்கி மேலாளர் பாண்டி செல்வன், தாசில்தார் ராஜா மணி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

