/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலத்திற்கு போடப்பட்ட கிராவல் மண் உள் வாங்கியதால் பள்ளம் : வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

ADDED : ஜூலை 06, 2025 03:25 AM

காரியாபட்டி: கட்டங்குடி ரோட்டில் கட்டப்பட்ட பாலத்தை ஒட்டி சமப்படுத்த கிராவல் மண் கொட்டப்பட்டது. சரிவர அழுத்தம் கொடுக்காததால் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாகும் ஆபத்தான சூழ்நிலை இருப்பதால், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பந்தனேந்தல் அருகே கல்குறிச்சி கிருஷ்ணாபுரம் ரோட்டில் இருந்து கட்டங்குடி செல்லும் ரோடு 1 கி.மீ., தூரத்திற்கு சீரமைக்கப்பட்டது. காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் கண்மாய்க்கு செல்ல வரத்து ஓடை செல்லும் இடத்தில் ரோட்டின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் பாலத்தில் கொட்டப்பட்ட கிராவல் மண் உள்வாங்கி பள்ளமானது. தார் ரோடு சேதமாகி வருகிறது. இரு வாகனங்கள் விலகிச் செல்ல முற்படும்போது, கிராவல் மண் மேலும் உள்வாங்கி கரைக வாகனம் கவிழும் ஆபத்து உள்ளது. பாலத்தில் பக்கவாட்டு சுவரும் இடியும் நிலை உள்ளது. வாகனங்கள் பழுதடையவும் வாய்ப்பு உள்ளது. பாலம் கட்டும் இடத்தில் சமப்படுத்த கிராவல் மண் கொட்டுகின்றனர். அதனை சரிவர அழுத்தம் கொடுப்பது கிடையாது. அப்படியே அதன் மீது மெட்டல் பரத்தி தார் போடுகின்றனர். கனரக வாகனங்கள் செல்லும் போது அழுத்தம் கொடுக்காத கிராவல் மண் உள்வாங்கி ரோடு, பாலம் சேதமடைந்தது. இரு வாகனங்கள் விலகிச் செல்லும் போது எடை தாங்காமல் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் பக்கவாட்டில் கவிழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. இதனை விபத்திற்கு முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
படம் உண்டு.