ADDED : நவ 03, 2025 12:00 AM

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் கல்லறை திருநாள் வழிபாடு நடந்தது.
விருதுநகர் இன்னாசியார் சர்ச், ஜெபமாலை அன்னை சர்ச், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச், ஆர்.ஆர்., நகரின் வேளாங்கண்ணி சர்ச், சாத்துார் இருதய ஆண்டவர் சர்ச் ஆகியவற்றில் பாதிரியார் அருள்ராயன், இணை பாதிரியார் பிரின்ஸ், பாதிரியார்கள் அந்தோணிசாமி, லாரன்ஸ், பீட்டர்ராய், காந்தி, எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம், உதவி பாதிரியார்கள் மரிய ஜான் பிராங்க்ளின், தேவராஜ் ஆகியோர் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது.
மேலும் சர்ச் வளாகத்தில் உள்ள கல்லறை தோட்டங்களில் பாதிரியார்கள் கல்லறைகளை மந்திரித்து வழிபாடுகள் நடத்தினர். அங்கிருந்தவர்கள், தங்களின் முன்னோர்களின் கல்லறைகளில் பூமாலை அணிவித்து ஆன்மா மோட்சமடைய மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

