தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வசதிகள் இல்லாத மயானம், சேதமான ரோடு

வசதிகள் இல்லாத மயானம், சேதமான ரோடு

வசதிகள் இல்லாத மயானம், சேதமான ரோடு


ADDED : பிப் 20, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 12:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை,- அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாத ஊராட்சி மயானம், சேதமான ரோடு, பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் உட்பட பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த செம்பட்டி ஊராட்சியில் குறிஞ்சா குளம், பொய்யாங்குளம், தொட்டியான் குளம் உட்பட கிராமங்கள் உள்ளன. இவற்றில் 100 தெருக்களுக்கு மேல் உள்ளது. பெரிய ஊராட்சியாக இருப்பதால் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை.

ஊராட்சி மயானத்தில் தண்ணீர் குடிநீர் மின்விளக்கு வசதிகள் இன்றி முட்புதர்கள் சூழ்ந்து தடுப்பூச்சுவர் இன்றி உள்ளது இரவு நேரங்களில் இறுதி காரியங்கள் செய்ய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதே போன்று ஆதிதிராவிடர் காலனிக்கு மயானமின்றி ரோடு ஓரங்களில் இறந்தவர்களை எரிக்கும் நிலை உள்ளது. மெயின் ரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத நிலையில் இருக்கிறது. மயானம் அருகில் மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது அம்மன் கோயில் அருகில் தார் ரோடு வாறுகால் அமைக்க வேண்டும். செம்பட்டியில் நூலகம் அமைக்க வேண்டும். பொய்யான்குளத்தில் புதிய ரேஷன் கடை கட்டித்தரப் பட வேண்டும்.

செம்பட்டியில் 3 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. ஒன்றைத் தவிர மற்ற இரண்டும் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சொந்தமாக அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும். செம்பட்டியில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ளது. இதனால் கழிப்பறை இன்றி பெண்கள் சிரமப்படுகின்றனர். செம்பட்டியில் உள்ள சுப்பையன் தெருவிற்கு ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இங்குள்ள ள ஆதிதிராவிடர் காலனியில் அமைக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் இடியும் நிலையில் உள்ளது. இவர்களுக்கு புதியதாக வீடு கட்டி தர வேண்டும். இந்தப் பகுதியில் ரோடு, தெருவிளக்கு, வாறுகால் அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us