/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு ஓரங்களில் வளர்ந்த மரங்களால் பசுமை அண்ணா நகர் இளைஞர்கள் அரும்பணி
/
ரோடு ஓரங்களில் வளர்ந்த மரங்களால் பசுமை அண்ணா நகர் இளைஞர்கள் அரும்பணி
ரோடு ஓரங்களில் வளர்ந்த மரங்களால் பசுமை அண்ணா நகர் இளைஞர்கள் அரும்பணி
ரோடு ஓரங்களில் வளர்ந்த மரங்களால் பசுமை அண்ணா நகர் இளைஞர்கள் அரும்பணி
ADDED : ஆக 25, 2025 05:32 AM

நகராட்சி நிர்வாகம் அண்ணா நகரில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக இந்த பகுதியில் இருந்த மரங்களை வெட்டி அகற்றியதால் மரங்கள் இன்றி வெறிச்சோடியது.
அண்ணா நகர் மற்றும் பெரியார் நகர் செல்லும் வழியில் இளைஞர்கள் ஒன்று கூடி மரக்கன்றுகள் வாங்கி நட்டு வேலி அமைத்து காலையும் மாலையும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். இதன் காரணமாக இந்த பகுதி தற்போது மரங்கள் வளர்ந்து பசுமைச் சோலையாக மாறி உள்ளது.மேலும் தற்போது காலியாக உள்ள இடங்களில் அரளிச்செடி, குரோட்டன்ஸ் செடி, நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
மழைக்காலத்தில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டதால் தற்போது இந்த பகுதி முழுவதும் மரத்தின் நிழலால் குழுமையான சூழல் நிலவுகிறது. இளைஞர்களின் மரம் வளர்ப்பிற்கு அப்பகுதியில் உள்ள தொழில் முனைவோர் உதவிகள் செய்கின்றனர். மரக்கன்றுகள் இலவசமாக வழங்கியும் நிதி உதவி அளித்தும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.தன்னார்வமிக்க இளைஞர்கள் அண்ணா நகர் மட்டும் இன்றி பெரியார் நகர் பகுதியில் நடராஜா தியேட்டர் ரோடு பகுதியிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்கின்றனர்.
மேலும் வைப்பாற்று கரையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பனைமர விதைகளையும் நட்டுள்ளனர். இப்பனை மரங்கள் தற்போது கிளைகள் விட்டு வளர துவங்கி உள்ளது. ரோடு விரிவாக்கம் மற்றும் பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம் மற்றும் மின்சாரத் துறையினர் என அரசு துறை அலுவலர்கள் தொடர்ந்து மரக்கிளைகளை வெட்டி வந்தாலும்.இந்தப் பகுதி இளைஞர்களின் தொடர் முயற்சியால் மீண்டும் மீண்டும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அண்ணா நகர் பகுதியில் இளைஞர்கள் திகழ்கின்றனர்.
நிதி உதவியால் சாத்தியம்
பசுமை இயக்கம், ராஜலட்சுமி அறக்கட்டளை, தடம் அமைப்பு என பல்வேறு அமைப்புகள் மரம் வளர்ப்பதற்கு உதவிகள் புரிந்தனர். தொழிலதிபர்கள் பலர் அளித்த நிதி உதவி மூலம் தரமான மரக்கன்றுகள், குரோட்டன்ஸ் செடிகள் வாங்கி சாலை ஓரத்தில் நட்டி பராமரித்து வருகிறோம்.
- கார்த்திக், தனியார் நிறுவன ஊழியர்.
மரம் வளர்ப்போம்
தொழிற்சாலைகள் பெருக்கத்தால் உலக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு ஒரு பகுதியில் அதிக மழையும் ஒரு பகுதியில் அதிக வெப்பமும் நிலவுகிறது. சீரான மழை பொழிய இயற்கை ஆக அமைந்த காடுகளை காப்பாற்ற வேண்டும். காடுகளில் தற்போது காட்டுத்தீ ஏற்பட்டு காடுகள் அழிவை நோக்கி செல்கின்றன. எனவே மரம் வளர்ப்போம்.
- கோபாலகிருஷ்ணன், வியாபாரி.